Oct 18, 2026
Thisaigal NewsYouTube

காய்கறிகளை கழிப்பறையில் சேமித்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
காய்கறிகளை கழிப்பறையில் சேமித்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது

அக்டோபர் 07

மலாக்கா, Tanjung Minyak Perdana தொழிற்பேட்டையில் உள்ள ஒரு கடையில் காய்கறிகளை கழிப்பறையில் சேமித்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சின் மலக்கா அலுவலகம் கடந்த மாதம் ஒப்ஸ் சமரின் கீழ் மேற்கொண்ட திடீர் ஆய்வின் போது இது கண்டறியப்பட்டது.

வெளிநாட்டினரால் நடத்தப்படும் சம்பந்தப்பட கடை, பொதுமக்கள் புகார்களின் அடிப்படையில் இரண்டு நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு, செப்டம்பர் 30 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆய்வு செய்யப்பட்டதாக அமைச்சின் மலாக்கா இயக்குநர் நோரேனா ஜாபர் தெரிவித்தார்.

சோதனையின் போது, ​​அமலாக்க அதிகாரிகள், கடையின் கழிப்பறையில் விற்பனைக்காக வைக்கப்பட்ட காய்கறிகளை கண்டுபிடித்தனர்!

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →