கோலாலம்பூர், நவம்பர்.17-
நாட்டில் உள்ள நெடுங்சாலைகளில் டோல் சாவடிகள் அல்லது ஓய்வெடுக்கும் தலங்களின் அருகில் வாகனப் பட்டறைகள் அமைக்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்திற்கு பெரிக்காத்தான் நேஷனல் எம்.பி. அஃப்னான் ஹமிமி தயிப் அஸாமுடின் இன்று நாடாளுமன்றத்தில் பரிந்துரை செய்துள்ளார்.
நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகனமோட்டிகளில் குறிப்பாக மோட்டார் சைக்கிளோட்டிகள், அடிக்கடி வாகனப் பழுதுக்கு ஆளாகி வருகின்றனர். இப்பிரச்னையைக் களைய டோல் சாவடிகள் மற்றும் ஓய்வெடுக்கும் தலங்களில் கட்டாயமாக ஒரு பட்டறை அமைக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
நெடுஞ்சாலைகளில் மோட்டார் சைக்கிள்கள் பழுதடையும் பட்சத்தில் நெடுஞ்சாலைகளுக்கு அப்பால்பட்ட நிலையில் வெளியாட்களின் உதவி நாடப்படுகிறது. இவ்வாறு மோட்டார் சைக்கிள்கள் பழுதடையும் நிலையில் அவற்றை உருட்டிக் கொண்டு செல்கின்றவர்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு இலக்காகி வருவதாக அந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக் காட்டினார்.








