ஜார்ஜ்டவுன், ஜூலை.22-
பினாங்கில் டெங்கர் லோரியிலிருந்து டீசல் எண்ணெய் திடீரென்று கசிந்ததால், சாலையில் வழிந்தோடிய எண்ணெய்யைச் சுத்தம் செய்யும் பணி முடுக்கிவிடப்பட்ட நிலையில் சுமார் 2 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் நிகழ்ந்தது. ஜார்ஜ்டவுன், ஜாலான் மஸ்ஜிட் நெகிரி சாலையில் ஏற்பட்ட இந்தச் சம்பவத்தினால் பல சாலைகளில் வாகனங்களின் போக்குவரத்து நிலைக்குத்தியாகத் தெரிவிக்கப்பட்டது.








