முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரஸாக் வீட்டுக்காவலை அனுபவிக்க வீடு திரும்பியதும் தமது அமைச்சரவைப் பதவி விலகல் நடைமுறைக்கு வரும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
தமது பதவி விலகல் கடிதத்தை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் நேரடியாக வழங்கியதாக அந்தோணி லோக் கூறினார்.
நேற்று பிரதமரைச் சந்தித்து இது குறித்து கலந்துரையாடியதாகவும், தமது பதவி விலகல் நடைமுறைக்கு வரும் காலத்தை பிரதமரே முடிவு செய்வார் என்றும் அவர் தெரிவித்தார்.
எனினும், தாம் தொடர்ந்து பதவியில் நீடிப்பதற்கு ஒரு காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று பிரதமரிடம் தெரிவித்ததாக அந்தோணி லோக் கூறினார்.
செப்டம்பர் 18 ஆம் தேதி மன்னிப்பு வாரியம் நஜிப்புக்கு நிபந்தனையுடனான மன்னிப்பு வழங்கிய நிலையில், அவர் வீட்டுக்காவலுக்காக வீடு திரும்பியதும் தமது பதவி விலகல் நடைமுறைக்கு வரும் என அந்தோணி லோக் குறிப்பிட்டார்.








