Sep 26, 2026
Thisaigal NewsYouTube
SVM தவணை 4 தேர்வு முடிவுகள் ஏப்ரல் 30-இல் வெளியீடு
தற்போதைய செய்திகள்

SVM தவணை 4 தேர்வு முடிவுகள் ஏப்ரல் 30-இல் வெளியீடு

Share:

2024-ஆம் ஆண்டு கோஹர்ட் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கான 'மலேசிய தொழிற்கல்வி சான்றிதழான SVM தவணை தேர்வு முடிவுகள் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி வியாழன் கிழமை வெளியிடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாடு முழுவதுமுள்ள 86 தொழிற்கல்வி கல்லூரிகளில் பயின்ற 16,240 மாணவர்கள் இந்த முடிவுகளைப் பெறவுள்ளனர். மாணவர்கள் அன்று காலை 10.00 மணி முதல் அந்தந்தக் கல்லூரிகளில் நேரடியாகவோ அல்லது myresultsvm.moe.gov.my என்ற இணையதளம் வாயிலாகவோ தங்களின் முடிவுகளைச் சரிபார்க்கலாம்.

இணையதள வசதி மே 6-ஆம் தேதி மாலை 6.00 மணி வரை செயல்பாட்டில் இருக்கும். TVET துறையில் சிறந்து விளங்கத் துடிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி அமைச்சு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.

Related News