Oct 12, 2026
Thisaigal NewsYouTube

கழிவுநீர்க் குழாய் தோண்டும் பணிதான் காரணமா?

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கழிவுநீர்க் குழாய் தோண்டும் பணிதான் காரணமா?

சுபாங் ஜெயா, ஏப்ரல்.06-

புத்ரா ஹைட்ஸில் நிலத்தடி எரிவாயு குழாயில் வெடிப்புக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட கழிவுநீர்க் குழாய் தோண்டும் பணிதான் காரணமா என்பதை மலேசிய காவல் துறை இன்னும் முழுதாக உறுதிப்படுத்தவில்லை. பல்வேறு அரசு அமைப்புகள் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றன. குத்தகையாளர் அமைத்த கழிவுநீர்க் குழாய் பாதையைத் தோண்டி காவல் துறை ஆய்வு செய்தனர். அது சாலை மட்டத்திலிருந்து 2.1 மீட்டர் ஆழத்தில் இருந்தது கண்டறியப்பட்டது. மேலும், குத்தகையாளர் 3 மீட்டருக்கு மேற்படாமல் 1.5 மீட்டர் அகலத்தில் தோண்டியுள்ளார் என சிலாங்கூர் காவல் துறைத் தலைவர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்தார்.

எரிவாயு குழாயைக் குறுக்காக 30 மீட்டர் வரை தோண்ட அனுமதி பெறப்பட்டிருந்தது. ஒப்பந்ததாரர் விதிமுறைகளைப் பின்பற்றியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும், இந்தச் சம்பவத்தில் குற்றவியல் அம்சம் ஏதும் உள்ளதா என்பது குறித்து காவல் துறை தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்த ஆரம்பக் கட்ட விசாரணை அறிக்கை ஏப்ரல் 15-ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →