Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பகடி வதையினால் மகள் அடுக்குமாடி வீட்டிலிருந்து விழுந்து இருக்கலாம்: தந்தை சந்தேகம்
தற்போதைய செய்திகள்

பகடி வதையினால் மகள் அடுக்குமாடி வீட்டிலிருந்து விழுந்து இருக்கலாம்: தந்தை சந்தேகம்

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.20-

கடந்த புதன்கிழமை கோலாலம்பூர், ஸ்தாப்பாக்கில் உள்ள ஒரு காண்டோமினியம் வீடமைப்புப் பகுதியின் 22 வது மாடியில் இருந்து கீழே விழுந்து தனது மகள் மரணமுற்றதற்கு, சக தோழியால் பகடிவதைக்கு ஆளாகியிருக்கலாம் என்று தந்தை ஒருவர் சந்தேகிக்கிறார்.

இது தொடர்பாக அந்தத் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

50 வயதுடைய ஜேஃப் ஹோ என்ற அந்த தந்தை, தனது 22 வயது மகள் தலைநகரில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் படித்து வருவதாகக் கூறினார்.

22வது மாடியில் இருந்து விழுந்ததாக நம்பப்படும் தனது மகள் இறந்து விட்டதாக காலை 8.45 மணியளவில் காண்டோமினியம் நிர்வாகத்தால் தமக்கு தகவல் அளிக்கப்பட்டதாகவும், தாம் உடனடியாக அந்த இடத்திற்குச் சென்றதாகவும் அவர் கூறினார்.

தனது மகளின் தோழிகள் கருத்து வேறுபாடு காரணமாக மனரீதியான பகடிவதைக்கு ஆளாகி, மன அழுத்ததால் அவதியுற்று வந்து இருக்கலாம் என்று அந்தத் தந்தை, வங்சா மாஜு மாவட்ட போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளார்.

தனது மகள் கடந்த வாரம் அந்த ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியிலிருந்து குதிக்க முயன்றதாகவும், ஆனால் காண்டோமினிய பாதுகாப்புக் காவலர்களால் வெற்றிகரமாக மீட்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

Related News