கார் மற்றும் ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி ரக வாகனம் மோதிக் கொண்ட கோர விபத்தில் இரட்டை சகோதரிகள் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் நேற்று புதன்கிழமை காலை மணி 11:30 மணியளவில் பத்து காஜா, ஜாலான் கம்போங் காஜா - தஞ்சோங் துவாலாங் என்ற இடத்தில் நடந்ததாக பேரா மாநில போலீஸ் தலைவர் ஏசிபி டத்தோ செரி முஹமாட் யுஸ்ரி ஹாஸ்ஸான் பஸ்ரி தெரிவித்தார்.
அந்த இரட்டை உடன் பிறப்புகளில் ஒருவரான 33 வயதுடைய பெண் ஓட்டி சென்ற ப்ரோடுவா கன்ச்சில் கார் முன்னாள் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்தி செல்ல முயன்ற போது எதிரே வந்த Nissan X - Trail வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக முஹமாட் யுஸ்ரி கூறினார்.
தலையிலும் கால்களிலும் பலத்த காயங்களுக்கு ஆளான அவ்விரு சகோதரிகளும் சம்பவ இடத்திலேயே மாண்டனர். நுர் சுஹைடா அப்துல் கரிம் மற்றும் நுர் சஹிடா ஆகியோரே இச்சம்பவத்தில் மாண்டதாக அடையாளம் கூறப்பட்டுள்ளது என்று முஹமாட் யுஸ்ரி குறிப்பிட்டார்.








