கோலாலம்பூர், நவம்பர்.26-
Hat Yai வெள்ளத்தில் சிக்கிய 6,300-க்கும் மேற்பட்ட மலேசியர்கள் தாய்லாந்திலிருந்து பாதுகாப்பாக மலேசியாவிற்குத் திரும்பியுள்ளதாக மலேசிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் பல மலேசியர்கள் அங்கு வெள்ளத்தில் சிக்கியுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் அங்குள்ள அடுக்குமாடி தங்கும் விடுதிகளில் தங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், விரைவில் அவர்களும் நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சொங்க்லாவிலுள்ள மலேசியத் துணைத் தூதரகமும், பாங்கோக்கில் உள்ள மலேசியத் தூதரகமும் இந்த மீட்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து மலேசியாவிற்கு ஆதரவு அளித்து வருகின்றன.
இதற்கிடையில், வெள்ளத்தில் சிக்கிய வட மலேசிய பல்கலைக்கழகமான UUM-மின் 36 மாணவர்களும், 4 பேராசிரியர்களும், கடந்த 3 நாட்களாக சரியான உணவு இன்றி தவித்து வந்த நிலையில், அவர்கள் தற்போது தங்கும் விடுதி ஒன்றில் பாதுகாப்பாக இருப்பதாக அப்பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.








