Mar 31, 2026
Thisaigal NewsYouTube
வெள்ளத்தின் இரண்டாவது அலையில் பகாங் , ஜோகூர் கடுமையாக பாதிக்கப்படலாம்
தற்போதைய செய்திகள்

வெள்ளத்தின் இரண்டாவது அலையில் பகாங் , ஜோகூர் கடுமையாக பாதிக்கப்படலாம்

Share:

கோலாலம்பூர், டிச. 7-


நாளை ஞாயிற்றுக்கிழமை தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் வெள்ளத்தின் இரண்டாவது அலையில் பகாங் மற்றும் ஜோகூர் கடுமையாக பாதிக்கப்படலாம் என்று ஆருடம் கூறப்பட்டுள்ளதாக துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

நாளை தொடங்கி, சுமார் இரண்டு வார காலத்திற்கு இந்த இரண்டாவது வெள்ள அலை நீடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விரு மாநிலங்களிலும் எத்தகைய சாத்தியத்தையும் எதிர்கொள்வதற்கு வெள்ள நிவாரண தளவாடங்கள் மற்றும் அதிகாரிகள், தொண்டுழியர்கள் தயார் நிலையில் இருப்பதாக அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.

Related News