கோலாலம்பூர், ஜனவரி.24-
மலேசியாவின் அடையாளமாகத் திகழும் Suria KLCC, எதிர்வரும் 'குதிரை' ஆண்டை முன்னிட்டு, பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் சமூக நலத் திட்டங்களை ஒருங்கிணைத்து ஒரு சிறப்பான சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த விழா ஜனவரி 16 முதல் பிப்ரவரி 18 வரை நடைபெறுகிறது. இந்தக் கொண்டாட்டக் காலத்தில், சூரியா கேஎல்சிசி வணிக வளாகம் முழுவதும் வண்ணமயமான அலங்காரங்கள், சிறப்புச் சலுகைகள் மற்றும் ஈர்க்கக்கூடிய ஷாப்பிங் அனுபவங்களால் களைகட்டும். இந்த உற்சாகம் KLCC Park மற்றும் கேஎல்சிசி வளாகம் முழுவதிலும் பரவி, கலை, உணவு மற்றும் வாழ்க்கை முறை என அனைத்திலும் ஒரு பண்டிகை உணர்வை ஏற்படுத்தும்.
இவ்வாண்டின் முக்கிய ஈர்ப்பாக, குதிரை ஆண்டைக் குறிக்கும் வகையில் Oriental Horse Carousel, மத்திய முற்றத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்குப் பின்னணியாக மலைத்தொடர்கள் மற்றும் செர்ரி ப்ளாசம் மலர்களின் அழகிய காட்சிகள் இடம் பெற்றுள்ளன.








