பொந்தியான், ஆகஸ்ட்.27-
ஜோகூர், பொந்தியானில் வீடொன்றில் நிகழ்ந்த தீ விபத்தில் இரு ஆடவர்கள் கருகி மாண்டனர். மேலும் ஒருவர் கடும் தீக்காயங்களுக்கு ஆளாகினார்.
இந்தச் சம்பவம் இன்று காலை 11 மணியளவில் ஜாலான் பொந்தியான், லோரோங் மங்கீஸ் என்ற இடத்தில் நிகழ்ந்தது.
வீடு முழுக்கத் தீ பரவியதை உணர்ந்த அந்த மூவரும் வீட்டிலிருந்து வெளியேற முயற்சித்துள்ளனர்.
எனினும் தீயின் ஜுவாலைக்கு மத்தியில் வீட்டின் கூரை இடிந்து விழுந்ததால் அதில் இருவர் அடியில் சிக்கி உயிரிழந்தனர். மற்றொருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய போதிலும் கடும் தீக்காயங்களுக்கு ஆளாகி பொந்தியான் மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொந்தியான் பாரு தீயணைப்பு நிலையத் தலைவர் முகமட் நஸ்ரி அஹ்மாட் ஷாஹிடோன் தெரிவித்தார்.








