கங்கார், ஆகஸ்ட்.09-
நாட்டில் வேப் மின் சிகரெட்டை முழுமையாகத் தடை செய்வது தொடர்பில் நிபுணர்கள் வழங்கக்கூடிய பரிந்துரைகள், அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்லி அஹ்மாட் தெரிவித்தார்.
அமைச்சரவையில் அந்த பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கு முன்னதாக நிபுணர்களைக் கொண்டு விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
அந்த ஆய்வு முடிந்த பின்னர் அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காகப் பரிந்துரைகள் முன் வைக்கப்படும் என்று அமைச்சர் டாக்டர் சுல்கிப்லி குறிப்பிட்டார்.








