கூடுதல் சுமையை ஏற்றி வந்த லோரியை தடுத்து நிறுத்த முற்பட்ட ஜே.பி.ஜே அமலாக்க அதிகாரிகளின் முயற்சிக்கு இடையூறு விளைவித்து கும்பல் ஒன்று சண்டியர் தனம் புரிந்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.
கோலசிலாங்கூர், ஈஜோக்கில் கடந்த சனிக்கிழமை மாலை 6 மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்ததாக சாலை போக்குவரத்து இலாகாவான ஜேபிஜே வின் அமலாக்க முதிர் நிலை இயக்குநர் டத்தோ லோக்மான் ஜமான் தெரிவித்தார். அனுமதிக்கப்பட்ட சுமையை விட கூடுதலான சுமையை ஏற்றிவந்த லோரி ஓட்டுநர்களுக்கு எதிராக Op Patuh Khas எனும் இந்த சிறப்பு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட லோரியை சோதனையிட முற்பட்ட போது உள்ளூரை சேர்ந்த கிட்டத்தட்ட 20, 30 பேர் ஜே.பி.ஜே அதிகாரிகளை சூழ்ந்து கொண்டு இடையூறு விளைவித்தாக அவர் குறிப்பிட்டார்.








