Oct 18, 2026
Thisaigal NewsYouTube

மூதாட்டி கருகி மாண்டார், கூடாட்டில் சம்பவம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மூதாட்டி கருகி மாண்டார், கூடாட்டில் சம்பவம்

சபா,கூடத்- டில் கம்போங் பிதுரு-என்ற இடத்தில் ஒரு வீட்டில் நிகழ்ந்த தீ விபத்தில் 76 வயது மூதாட்டி கருகி மாண்டார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8.10 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் கொழுந்து விட்டு எரிந்த தீயின் ஜுவாலைக்கு மத்தியில் தப்பிக்க இயலாமல் அந்த மூதாட்டி சிக்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அந்த இரண்டு மாடி வீட்டில் அந்த மூதாட்டியின் சடலம், வீட்டின் ஓர் அறையில் கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஏதுவாக அந்த மூதாட்டியின் சடலம், போலீசாரிடம் ஒப்படைக்கப்ப்ட்டதாக தீயணைப்புப்படையினர் தெரிவித்தனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →