கோலாலம்பூர், அக்டோபர்.05-
காஸாவிற்கான குளோபல் சுமுட் ஃபுளோதில்லா GSF மாந்தநேயப் பணியில் பங்கேற்று, சியோனிஸ் ஆட்சியால் கைது செய்யப்பட்ட மலேசிய வீரர்களும் வீராங்கனைகளும் விடுவிக்கப்பட்டு, நேற்று இரவு துருக்கியின் இஸ்தான்புல் நகரை அடைந்தனர். அவர்கள் நாடு திரும்புவதற்கு முன், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவின் பேரில், அங்கு முழுமையான உடல்நலம், உளவியல் பரிசோதனைகள் வழங்கப்பட உள்ளன.
துருக்கியில் உள்ள மலேசிய வெளியுறவு அமைச்சின் குழுவினர், அவர்களை விரைவில் மலேசியாவிற்குத் திரும்ப அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றதாக பிரதமர் அன்வார் குறிப்பிட்டார். அவர்கள் நாளை திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமைக்குள் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.








