Mar 13, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

நிலவையில் உள்ள பணத்தை செலுத்த பாஸ் கட்சிக்கு உத்தரவு

Share:

தனது அதிகாரப்பூர்வ வார ஏடான ஹராக்கா பத்திரிகையை அச்சிட்டதற்கான கட்டணத்தை செலுத்தாமல் கடன் வைத்துள்ள பாஸ் கட்சி, நிலுவையில் உள்ள 5 லட்சத்து 56 ஆயித்து 233 வெள்ளி 69 காசை, அச்சக நிறுவனமான நஜ் ரெசோர்ஸஸ் மலேசியா எஸ்டிஎன் பிஎச்டி. நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

இவ்வழக்கில் பாஸ் கட்சி, அதன் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹாஸ்ஸான், ஹராக்கா வார ஏட்டை வெளியிடும் நிறுவனமான கெலெரி மீடியா செர்பானிக்கா எஸ்டிஎன் பிஎச்டி ஆகிய தரப்பினரை வழக்கில் பிரதிவாதிகளாக அந்த அச்சகம், தனது வழக்கு மனுவில் குறிப்பிட்டு இருந்தது.

Related News