Dec 29, 2025
Thisaigal NewsYouTube
சிகாமாட்டில் வெள்ளம் காரணமாக 7 நிவாரண மையங்களில் 163 பேர் தஞ்சம்
தற்போதைய செய்திகள்

சிகாமாட்டில் வெள்ளம் காரணமாக 7 நிவாரண மையங்களில் 163 பேர் தஞ்சம்

Share:

சிகாமாட், டிசம்பர்.29-

ஜோகூர், சிகாமாட்டில், பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, இன்று திங்கட்கிழமை காலை நிலவரப்படி, மொத்தம் ஏழு நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

அங்கு பாதிக்கப்பட்ட 54 குடும்பங்களைச் சேர்ந்த 163 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை 32 குடும்பங்களைச் சேர்ந்த 103 பேர் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அந்த எண்ணிக்கையானது அதிகரித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிகாமாட்டில் உள்ள ஜாலான் ஜாபி - புக்கிட் தெம்புருங் சாலையில், சுமார் 0.5 மீட்டர் உயரத்திற்கு வெள்ளம் தேங்கியுள்ளதால் அச்சாலையானது மூடப்பட்டுள்ளது.

அதே வேளையில், சுங்கை மூவார், சுங்கை கெசாங், தெலுக் ரிம்பா, சுங்கை லெனிக் உள்ளிட்ட நான்கு ஆறுகளின் நீர் மட்டம் அபாயகரமான நிலையில் உயர்ந்துள்ளது.

மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா வெளியிட்டுள்ள தகவலின்படி, சிகாமாட், குளுவாங், மெர்சிங் மற்றும் கோத்தா திங்கி ஆகிய மாவட்டங்களில் இன்று தொடர் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related News