Oct 9, 2026
Thisaigal NewsYouTube

செம்பனைக்கானப் புதிய சந்தையை ஆராயும் மலேசியா!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
செம்பனைக்கானப் புதிய சந்தையை ஆராயும் மலேசியா!

கோத்தா பாரு, ஜூன்.21-

தற்போது நிலவி வரும் உலகளாவிய புவிசார் அரசியல் மோதல்களால் பாதிக்கப்பட்டிருக்கும் முக்கியச் சந்தைகளில் உள்ள சார்புநிலையைக் குறைக்கும் முயற்சியாக, மலேசியப் செம்பனை எண்ணெயை இதுவரை கொள்முதல் செய்யாத புதிய சந்தைகளைத் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தோட்டத் தொழில், மூலப் பொருட்கள் துறை அமைச்சர் ஜொஹாரி அப்துல் கானி தெரிவித்தார்.

இஸ்ரேல்-ஈரான் மோதல்கள், ரஷ்யா-உக்ரைன் இடையேயான மோதல்கள், மலேசியாவின் செம்பனை உள்ளிட்ட ஏற்றுமதியை பாதிக்கின்றன என்றார். ஐரோப்பிய சந்தைகளில் நுழைய, மலேசியப் செம்பனை உற்பத்தியாளர்கள் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையையும் பல்லுயிர்ப் பாதுகாப்பு நடைமுறைகளுக்கான தரநிலைகளையும் சந்திக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →