Dec 2, 2025
Thisaigal NewsYouTube
முகைதீன் மருமகனுக்கு எதிரான எஸ்பிஆர்எம் விசாரணை நிறைவு பெற்றது
தற்போதைய செய்திகள்

முகைதீன் மருமகனுக்கு எதிரான எஸ்பிஆர்எம் விசாரணை நிறைவு பெற்றது

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.29-

முன்னாள் பிரதமர் டான் ஶ்ரீ முகைதின் யாசின் மருமகன் டத்தோ ஶ்ரீ முகமட் அட்லான் பெர்ஹாம் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டு தொடர்பான மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் விசாரணை நிறைவு பெற்று விட்டதாக அதன் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.

ஒரு வர்த்தரான அட்லான் பெர்ஹாம் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் வழக்கறிஞர் மன்சோர் சாஅட் ஆகிய இருவருக்கு எதிரான குற்றசாட்டுகளை உறுதிப்படுத்தும் முயற்சியில் தற்போது எஸ்பிஆர்எம் கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

முதலில் அவ்விருவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் தன்மை குறித்து எஸ்பிஆர்எம் விசாரணை செய்து வந்ததாகக் குறிப்பட்ட அஸாம் பாக்கி, தற்போது விசாரணை முடிவடைந்து, குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக விளக்கினார்.

தவிர தற்போது வெளிநாட்டில் பதுங்கியிருக்கலாம் என்று நம்பப்படும் அவ்விருவரையும் நாட்டிற்குக் கொண்டு வந்து, அவர்களை நீதின்றத்தில் நிறுத்துவதற்கான நடவடிக்கையில் எஸ்பிஆர்எம் முழு வீச்சாக ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News