Dec 3, 2025
Thisaigal NewsYouTube
திங்கட்கிழமை சவப்பரிசோதனை நடைபெறும்
தற்போதைய செய்திகள்

திங்கட்கிழமை சவப்பரிசோதனை நடைபெறும்

Share:

எல்மினா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீது டி.என்.ஏ மரபணு சோதனை வரும் திங்கட்கிழமை நடைபெறுமென்று போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

கிள்ளான் தேங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் சவக்கிடங்கில் 10 பேரின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை அடையாளம் காண்பதில் சற்று கால அவகாசம் தேவைப்படுவதாக ரஸாருதீன் குறிப்பிட்டார்.

விபத்து நடந்த கத்ரி நெடுஞ்சாலையில் விமானம் சிதறிக்கிடந்த பகுதியில் மனித உடல் தொடர்புடைய கிட்டத்தட்ட 200 அவயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக ஐ.ஜி.பி தெரிவித்தார். இந்த உடல் அவயங்கள் , 22 குடும்ப உறுப்பினர்களின் டி.என்.ஏ சோதனையின் மூலம் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்படுவர் என்று ரஸாருதீன் குறிப்பிட்டார்.

Related News