Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பேரணிக்கு ஒத்துழைப்பு நல்கும்படி போலீஸ் துறைக்கு அன்வார் அறிவுறுத்தல்
தற்போதைய செய்திகள்

பேரணிக்கு ஒத்துழைப்பு நல்கும்படி போலீஸ் துறைக்கு அன்வார் அறிவுறுத்தல்

Share:

கோலாலம்பூர், ஜூலை.24-

வரும் சனிக்கிழமை கோலாலம்பூர் மாநகரில் தனக்கு எதிராக நடைபெறும் துருன் அன்வார் பேரணியில் பங்கேற்பவர்களுக்கு எந்தவொரு மிரட்டலும் விடுக்காமல் அவர்களுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், போலீஸ் துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பாஸ் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பேரணிக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல், அவர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கு வழிவிடுமாறு போலீஸ் துறையை அன்வார் கேட்டுக் கொண்டுள்ளார் என்று அவரின் முதிர்நிலை பத்திரிகை செயலாளர் துங்கு நாஷ்ருல் அபாய்டா தெரிவித்தார்.

ஜனநாயகத்தைப் பேணுவதில் மடானி அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளது.

அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் உட்பட பேச்சுரிமை என்பது ஒரு சுதந்திரமான நாட்டில் முக்கிய அம்சமாகும். பிரதமர் அன்வாரின் தலைமையின் கீழ் எந்த அளவிற்கு சுதந்திரம் வழங்கப்படுகிறது, மதிக்கப்படுகிறது என்பதற்கு இது சான்றாகும் என்று அவர் விளக்கம் அளித்தார்.

பொது ஆர்ப்பாட்டங்கள் உட்பட அரசாங்கத்துடனான எந்தவொரு கருத்து வேறுபாடும் கண்மூடித்தனமாகத் தடுக்கப்படாது.

மாறாக, அது சட்டத்தை மீறாத வரை மற்றும் பொது பாதுகாப்பை அச்சுறுத்தாத வரை ஓர் ஆரோக்கியமான மற்றும் ஜனநாயக முதிர்ச்சிக்கான நடைமுறையின் கீழ் மேற்கொள்ளப்படுவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்று பிரதமர் அலுவலகத்தில் இன்று அளிக்கப்பட்ட அன்றாட விளக்கமளிப்பு நிகழ்வில் துங்கு நாஷ்ருல் அபாய்டா இதனைத் தெரிவித்தார்.

Related News