மலேசிய குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர்களில் கடந்த செப்டம்பர் மாதம் வரையில் 9,539 பேரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சர் டத்தோ செரி சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
மலேசிய குடியுரிமை விண்ணப்பங்களுக்கான அங்கீகாரம் விருப்பம் போல் வழங்கப்படுவதில்லை என்றும், ஒவ்வொரு விண்ணப்பமும் மிக கவனமாக பரிசீலிக்கப்பட்ட பின்னரே அதன் நிலை குறித்து முடிவு செய்யப்படுவதாக சைபுடின் விளக்கினார்.
கோலாலம்பூர், பண்டார் துன் ரசாக் விளையாட்டு அரங்கு மண்டபத்தில் இன்று 19 விண்ணப்பத்தாரர்களின் குடியுரிமை தொடர்பான கடிதங்களை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.








