கோலாலம்பூர், நவம்பர்.12-
கோலாலம்பூரில் உள்ள முன்னணி ஹோட்டல் ஒன்றில் இறந்த கிடந்த தைவானைச் சேர்ந்த ஊடகப் பிரபலமான பெண் கொலை தொடர்பில் தற்போது தடுப்புக் காவலில் வைக்கபட்டுள்ள ராப் பாடகர் Namewee மீதான விசாரணை அறிக்கை சட்டத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்துள்ளார்.
துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகம் மூலமாக விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு அடுத்த உத்தரவுக்காக தாங்கள் காத்திருப்பதாக அவர் மேலும் கூறினார்.








