செர்டாங், ஆகஸ்ட்.30-
மலேசியா நாளை ஆகஸ்ட் 31 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தனது 68 ஆவது தேசியத் தினத்தை வெகு விமரிசையாகக் கொண்டாடவிருக்கிறது.
தேசியத் தின கொண்டாட்டம் நடைபெறும் புத்ராஜெயா சதுக்கம் ஒரே வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டு, நாளை ஞாயிற்றுக்கிழமை தேசிய தின அணிவகுப்பு நடைபெறுகிறது.
இந்நிலையில் செர்டாங், மலேசிய விவசாயப் பூங்காவில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தேசிய தினம் தொடர்பான உரையை நிகழ்த்தியுள்ளார்.
நாட்டின் மீது தேசப்பற்றை ஊக்குவிப்பதையும், பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி மலேசியா முன்னெடுக்கப்படுவதையும் பிரதமர் தமது உரையில் வலியுறுத்தியுள்ளார்.








