அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்க இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ள பருவமழை காரணமாக கடல் உணவுகள், குஇப்பாக மீன்களின் விலையை வியாபாரிகள் அதிகரிக்க வேண்டாம் என மலேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் L K I M கேட்டுக்கொண்டுள்ளது.
இது குறித்து பேசிய அதன் தலைவர் முஹமாட் ஃபயிஸ் ஃபட்சில் தெரிவிக்கயில், அக்காலக் கட்டத்திற்குத் தேவையான மீன்கள் போதுமானவையாக இருக்கிறது என்றார்.
கிழக்குக் கரையில் குறிப்பாக சிறிய படகுகள் செல்லும் பகுதியில் மட்டுமே மீன்கள் பிடிப்பதில் சிரமம் உள்ளது. அந்தப் பகுதியைக் கடந்து பெரிய கப்பல்கள் செல்லும் பி ,சி பகுதிகள் மீன்கள் கிடப்பதில் எவ்வித சிக்கலும் இல்லை. மேலும், மேற்குக் கரையில் மீன்கள் கிடைப்பதிலும் எந்தத் தடையும் இல்லை என அவர் விளக்கினார்.
வைப்பில் உள்ள மீன்களோடு இறக்குமதியும் செய்யப்படும் மீன்களும் இருக்கின்றன. தொடர்ந்து மீன்பிடித்தலும் நடந்து வருகிறது சில தனியார் நிறுவனங்களும் தமது வாரியத்தோடு இணைந்து இவ்விவகாரத்தில் செயல்படுவதால் நாட்டு மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய போதுமான மீன்கள் இருப்பதாக முஹ்மாட் ஃபாயிஸ் ஃபட்சில் குறிப்பிட்டார்.
எனவே, பருவ மழையைக் காரணம் காட்டி வியாபாரிகள் கடல் உணவு வகைகள், குறிப்பாக மீன்களின் விலையை உயர்த்த வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.








