பத்து வருடங்களுக்கு மேலாக தரம் குறைந்த பழையப் பொருட்களைகூட, மலேசிய சந்தையில் குறைந்த விலையில் விற்பனை செய்து பணமாக்க முடியும் என்ற நம்பிக்கை அந்நிய நாட்டு வியாபரிகள் வந்ததன் காரணமாகே நாட்டிற்குள் அவர்களின் ஆக்கிரமிப்பு அதிகமாகிவிட்டது.
மலேசிய வாடிக்கையாளகளின் இந்த ஏமாளித்தனத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ளும் அந்நிய வியாபாரிகள், தரம் குறைந்த பொருட்களை எக்ஸ்போ என்ற பெயரில் நடைபெறக்கூடிய தீபாவளி சந்தைகளில் விற்பனை செய்யும் போது அப்பொருட்களின் விலை மிக மலிவானதைப் போல் வாடிக்கையாளர்களுக்கு தோன்றுகிறது. இது அந்நிய விபாயாரிகள் நடத்துகின்ற ஒரு மறைமுக சுரண்டல் என்பதை பெரும்பாலான வாடிக்கையாளகள் உணர்ந்திருக்கவில்லை என்று மலேசிய சிறு வியாபாரிகளின் குரலாக ஒலிக்கும் திருமதி கலா பாலமுரளி கூறுகிறார்.
அந்நிய வியாபாரிகளால் விற்பனை செய்யப்படும் பொருட்கள் சில வாடிக்கையாளர்கள் மட்டுமே உணர்ந்துள்ளனர். அவற்றை வாங்கிச் சென்றால் இரண்டு, மூன்று முறை சலவை செய்யும் போது சாயம் வெலுத்து விடும், துணி கிழிந்து விடும் போன்ற விழிப்புணர்வை கொண்டுள்ளனர்.
அத்தகைய விழிப்புணர்வைதான் நமது வாடிக்கையாளர்கள் கொண்டு இருக்க வேண்டும் என்று ஜவுளி வியாபார வர்த்தகரும், மலேசிய ஆகம அணியின் துணைத் தலைவருமான கலா பாலமுரளி தெரிவித்துள்ளார்.








