மர லாரியிலிருந்து மரக் கட்டைகளை இறக்கி வைக்கும் பொழுது, அது 53 வயது முதியவர் மீது விழுந்ததால் அவர் மரணமுற்றார். வேலையில் அமர்ந்து இரண்டே மாதங்களான் நிலையில், குவா மூசாங்கில் உள்ள மரத் தொழிற்சாலையில் , மரக் கட்டைகளை லாரியிலிருந்து இறக்கி வைக்கும் பொழுது இந்த துயரச் சம்பவம் நிகந்ததாக குவா மூசாங் வட்டார போலீஸ் தலைவர் சிக் சூன் ஃபூ தெரிவித்தார்.
லாரியிலிருந்து மரக் கட்டைகளை இறக்கு வைக்கும் பொழுது எதிர்பாராத நிலையில் அது ஆடவரின் தலையில் விழுந்ததில் சிகிச்சை பலனளிக்காமல் அந்த 53வயது முதியவர் நோராஸ்லான் ஹம்டான் நேற்றும் மாலை 2.30 மணியளவில் மருத்துவமனையில் இறந்தார் என அவர் மேலும் தெரிவித்தார்.








