May 21, 2026
Thisaigal NewsYouTube
முதலீடு மோசடியில் தம்பதியர் 1.6 மில்லியன் வெள்ளிக்கு மேல் இழந்தனர்
தற்போதைய செய்திகள்

முதலீடு மோசடியில் தம்பதியர் 1.6 மில்லியன் வெள்ளிக்கு மேல் இழந்தனர்

Share:

மர வேலைப்பாடு நிறுவனத்தின் முதலாளிகளான திருமண தம்பதியர் முதலீட்டு மோசடியில் 1.6 மில்லியன் வெள்ளிக்கு மேல் இழந்தனர்.

38 வயதான மனைவி முகநூலில் முதலீட்டு திட்டத்தில் ஆர்வத்தை வெளிப்படுத்திய பொழுது மூன்று நபர்களால் மூன்று வெ்வேறு எண்களில் இருந்து தொடர்பு கொள்ளப்பட்டதாக ஜாசின் ஓசிபிடி அஹ்மாட் ஜாமில் ரட்சி தெரிவித்தார்.

அவர் மூன்று வெவ்வேறு முதலீடு தொடர்பான புலனக் குழுவில் இணைக்கப்பட்டு பங்கு முதலீட்டு கருத்தரங்குகள், முதலீடு பற்றிய குறிப்புகள் போன்றவை விளக்கப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது.

பின் 2 வாரம் கழித்து அக்குழுவில் இருந்து அவர்கள் வெளியேறும்படியும் Google Play Store - ரில் பல Apps பதிவிறக்கம் செய்து 19 நிறுவன கணக்குகளுக்கு அத்தொகையை பரிமாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டதாகவும் ஓசிபிடி அஹ்மாட் ஜாமில் குறிப்பிட்டார்.

பின் அத்தம்பதியர் ஏமாற்றப்பட்டுவிட்டதை உணர்ந்து போலீசில் புகார் செய்ததாக அவர் அறிவித்தார்.

Related News