Sep 19, 2026
Thisaigal NewsYouTube
அப்துல் அஸீஸ் மற்றும் குடும்பத்தினர் சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் உத்தரவு
தற்போதைய செய்திகள்

அப்துல் அஸீஸ் மற்றும் குடும்பத்தினர் சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் உத்தரவு

Share:

முன்னாள் தாபோங் ஹாஜி தலைவர் டத்தோ ஶ்ரீ அப்துல் அஸீஸ் அப்துல் ரஹிம் மற்றும் அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் தங்களது சொத்துகளை அறிவிக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

சட்டப்படி சொத்துகளை அறிவிக்க அவர்களுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டத்தோ ஶ்ரீ அப்துல் ஹாலிம் அமான் தெரிவித்தார். தேவையெனில் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.

கடந்த 9ஆம் தேதி அப்துல் அஸீஸ் மீது ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

தாபோங் ஹாஜி தொடர்பான அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கையைத் தொடர்ந்து, ஆறு பேர் மீது எட்டு விவகாரங்களில் எஸ்பிஆர்எம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது. மேலும் ஐந்து விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Related News