கோலாலம்பூர், அக்டோபர்.22-
கோலாலம்பூரில் நடைபெறவுள்ள 47-வது ஆசியான் உச்சி மாநாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள் இதுவரை இல்லாத அளவுக்கு சிக்கலானதாகவும், சவாலானதாகவும் இருக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
மாநாட்டை தடையின்றி நடத்துவதற்காக சுமார் 10,000-த்திற்க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பணியில் ஈடுபடவுள்ளனர்.
எந்தவித அவசரநிலையையும் எதிர்கொள்ள தாங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், பாதுகாப்பிற்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் புக்கிட் அமான் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு துறை இயக்குநர் டத்தோ ஶ்ரீ அஸ்மி அபு காசிம் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானோர் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் மாநில போலீஸ் துறைகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.