Dec 4, 2025
Thisaigal NewsYouTube
நாட்டிற்கு எதிராக அந்நிய சக்திகளின் அச்சுறுத்தல்: போலீஸ் துறை அடையாளம் கண்டது
தற்போதைய செய்திகள்

நாட்டிற்கு எதிராக அந்நிய சக்திகளின் அச்சுறுத்தல்: போலீஸ் துறை அடையாளம் கண்டது

Share:

கோலாலம்பூர், ஜூலை.23-

மலேசியாவிற்கு எதிராக வெளிநாட்டு உளவுத்துறையால் திட்டமிடப்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படும் அந்நிய சக்திகளின் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதை அரச மலேசிய போலீஸ் படை கண்டறிந்துள்ளது.

எனினும் நாட்டின் தேசியப் பாதுகாப்பைப் பாதிக்கக்கூடிய இத்தகைய அந்நிய சக்திகளின் அச்சுறுத்தல்களைச் சமாளிப்பதற்கு போலீஸ் துறை எப்போதும் தயார் நிலையில் இருப்பதாக போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இந்த அச்சுறுத்தல், வெளிநாட்டு உளவுத் துறையால் திட்டமிடப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. நாட்டின் நிலைத்தன்மை மற்றும் இறையாண்மையைச் சீர்குலைப்பதற்கு இத்தகைய முயற்சிகள் நடக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

மலேசியாவில் தங்கியிருந்த ஒரு பாலஸ்தீனப் பிரஜையைக் கடத்திச் சென்றது, நபர் ஒருவர் தன் வசம் 6 துப்பாக்கிகளை வைத்திருந்தது முதலிய செயல்கள் இந்த சம்பந்தப்பட்ட வெளிநாட்டு உளவுத்துறையால் மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் டத்தோ ஶ்ரீ காலிட் தெரிவித்துள்ளார்.

அந்நிய சக்திகளின் ஊடுருவலை முறியடிப்பதற்கு அரச மலேசியப் போலீஸ் படை, மலேசிய குடிநுழைவுத்துறை, மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு ஏஜென்சி மற்றும் அனைத்துலக போலீஸ் துறையான இண்டர்போல் ஆகியவற்றின் கூட்டு ஒத்துழைப்புடன் நடப்பு நிலை அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக ஐஜிபி தெரிவித்தார்.

Related News