Jul 2, 2026
Thisaigal NewsYouTube
T20 புதிய வரையறை குறித்து அமைச்சரவையில் இன்னும் விவாதிக்கப்படவில்லை - அமைச்சர் அமீர் ஹம்சா தகவல்
தற்போதைய செய்திகள்

T20 புதிய வரையறை குறித்து அமைச்சரவையில் இன்னும் விவாதிக்கப்படவில்லை - அமைச்சர் அமீர் ஹம்சா தகவல்

Share:

ஜார்ஜ் டவுன், மே.17-

மலேசியாவில் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் B40, M40, T20 வருமானப் பிரிவுகள், தற்போதைய பொருளாதார நிலையைப் பிரதிபலிக்கிறதா? என்ற விவாதம் அதிகரித்து வரும் நிலையில், T20 பிரிவுக்கான புதிய வரையறை குறித்து அமைச்சரவை இதுவரை எந்த ஆலோசனையும் நடத்தவில்லை என்று இரண்டாவது நிதியமைச்சர் அமீர் ஹம்ஸா அஸிஸான் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தற்போது மானிய எரிபொருள் விநியோகத்தை மேம்படுத்துவதிலும், குறிப்பாக BUDI95 திட்டத்தின் செயல்முறையை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த வார அமைச்சரவைக் கூட்டத்தில் T20 அல்லது வேறு எந்த ‘T’ வகைப்பாடு பற்றியும் விவாதிக்கப்படவில்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், உயர் வருமானம் பெறும் மக்களுக்கான பெட்ரோல் மானிய மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவை, அரசாங்கம் விரைவில் இறுதிப்படுத்தும் என்றும், அதற்கு முன்பு அது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

375,000 ரிங்கிட் போலி ஜெர்சிகள் பறிமுதல்!

375,000 ரிங்கிட் போலி ஜெர்சிகள் பறிமுதல்!