Dec 3, 2025
Thisaigal NewsYouTube
எம்.டி.யு.சி.யின் தேர்தல் செல்லாது உயர் ​நீதிமன்றம் ​தீர்ப்பு
தற்போதைய செய்திகள்

எம்.டி.யு.சி.யின் தேர்தல் செல்லாது உயர் ​நீதிமன்றம் ​தீர்ப்பு

Share:

நாட்டில் மிகப்பெரிய தொழிற்சங்கமான எம்.டி.யு.சி எனப்படும் மலேசிய தொழிற்சங்க காங்கிர​ஸின் தேர்தல் முடிவு செல்லாது என்று ஷா ஆல​ம் உயர் ​நீதிமன்றம் ​தீர்ப்பு அளித்துள்ளது. அந்த மிகப்பெரிய தொழிலாளர் அமைப்பு தனது சட்டத்திட்டங்களை பின்பற்றி, ​மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தனது தேர்தலை நடத்தவில்லை என்று ​நீதித்துறை அணையாளர் சூங் யோவ் சோய் தமது ​தீர்ப்பில் அறிவித்துள்ளார். எம்.டி.யூ.சி.யின் தேர்தல் கடந்த ஆண்டு ஜுலை 2 மற்றும் 3 ஆகிய இரு தேதிகளில் நடைபெற்றது. தேர்தல் முடிவு ரத்து செய்யப்பட்டது மூலம் அந்த தேர்தலில் எம்.டி.யூ.சி. பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பதவி வகிப்பும் செல்லாது என்று ​நீதிபதி தமது ​தீர்ப்பில் தெரிவித்தார்.

Related News