பத்தாங் காலி, செப்டம்பர்.04-
சாலை விபத்தில் மரணமடைந்த காவல் அதிகாரி முகமட் ஃபைஸால் அப்துல் ரஸாக்கின் கல்லறைக்குச் சென்று பார்வையிட்டார் பேரரசி ராஜா ஸாரித் சோஃபியா.
பாத்தாங் காலி கம்போங் குவாந்தான் முஸ்லிமில் உள்ள முகமட் ஃபைஸாலின் கல்லறைக்குச் சென்ற அவர், அங்கு சிறப்புப் பிரார்த்தனையில் கலந்து கொண்டார்.
அதே வேளையில், பத்தாங் காலி, டேசா ஆலாம் ரியாவில் உள்ள முகமட் ஃபைஸாலின் வீட்டிற்கும் சென்று, ஃபைஸாலின் மனைவிக்கு ஆறுதல் கூறினார்.
மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் காவல் அதிகாரிகளில் ஒருவராகப் பணியாற்றி வந்த ஃபைஸால், கடந்த செப்டம்பர் 2-ம் தேதி சாலை விபத்தில் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








