இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட Unexploded Ordnance வகை வெடிக்குண்டு கோத்தக்கினபாலுவின் கோத்தா பெலூட் வட்டார போலீசாருடன் இணைந்து வெடிக்குண்டு அகற்றும் கடற்படையின் உதவியுடன் அகற்றப்பட்டுள்ளது.
பூலாவ் மந்தானானீ கடற்கரை பகுதியில் கண்டெடுக்கப்பட்ட அந்த வெடிக்குண்டு அமெரிக்க நாட்டில் தயாரிக்கப்பட்டு இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்டவை என கடற்படை போலீசார் முகமட் நஸ்ரூல் மாட் டவூட் தெரிவித்தார்.
அந்த வெடிக்குண்டு கடற்கரை பகுதியிலிருந்து பாதுக்காப்பாக நிலப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அது அழிக்கப்பட்டு விட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.








