ஷா ஆலாம், டிசம்பர்.29-
மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா, இன்று தமது 2026 புத்தாண்டுச் செய்தியில் அரசியல் தலைவர்களுக்குக் கடும் எச்சரிக்கையும் அறிவுரையும் விடுத்துள்ளார்.
அடுத்த பொதுத்தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல்வாதிகள் வெற்று அரசியல் பேசுவதை நிறுத்தி விட்டு, மக்களின் உண்மையானப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்று சுல்தான் வலியுறுத்தியுள்ளார்.
சிலாங்கூர் மாநிலத்தில் நீண்ட காலமாகத் தொடரும் வெள்ளப் பிரச்சினைக்கு 'பூஜ்ஜியம் வெள்ளம்' என்ற இலக்கை எட்ட தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று சுல்தான் உத்தரவிட்டுள்ளார்.
திட்டமிடலில் ஏற்படும் தோல்விகளுக்கு மக்களைப் பலிகடா ஆக்கக்கூடாது என்றும் அவர் சாடியுள்ளார்.
அரசியல் பிரதிநிதிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்தவும் பாடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இனம் மற்றும் மத ரீதியான பிளவுகளைத் தவிர்த்து, சிலாங்கூர் மாநிலத்தின் சுபிட்சத்திற்காக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் சுல்தான் அறிவுறுத்தியுள்ளார்.








