ஜார்ஜ்டவுன், செப்டம்பர்.29-
பினாங்கு, லிந்தாங் மக்காலும் 2-இல் இன்று திங்கட்கிழமை அதிகாலை மரம் ஒன்று வேறோடு சாய்ந்ததில் 3 கார்களும், இரண்டு மோட்டார்களும் சேதமடைந்தன.
அதிகாலையில் பெய்த பலத்த காற்று மற்றும் மழையின் காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.
அதிகாலையில் சுமார் 2.40 மணியளவில் தங்களுக்குக் கிடைத்த தகவலின் படி, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டதாகவும் பினாங்கு தீயணைப்புத் துறை குறிப்பிட்டுள்ளது.
அதே வேளையில், இச்சம்பவத்தில் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.








