Jul 31, 2026
Thisaigal NewsYouTube
மூன்று கார்கள் மோதி ஒருவர் பலி
தற்போதைய செய்திகள்

மூன்று கார்கள் மோதி ஒருவர் பலி

Share:

கோலா சிலாங்கூரிலிருந்து தஞ்சோங் காராங்கிற்கு செல்லும் வழியில் ஜாலான் பெர்னாம் - மில் மூன்று வாகனங்கள் மோதி ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று, இரவு 10 மணியளவில் இத்துயர சம்பவம் நடந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு, மீட்பு படை துணைத்தலைவர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

நான்கு நபர்கள் ஒரு காரிலும், மற்ற இரண்டு கார்களில் இருவரும் பயணம் செய்ததாக தெரியவந்தது.

விபத்தில் ஏற்பட்ட பலத்த காயத்தினால் அந்த ஆடவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் மருத்துவ பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் அஹ்மாட் முக்லிஸ் கூறினார்.

Related News