கோலாலம்பூர், செப்டம்பர்.03-
எஸ்டிபிஎம் தேர்வை முடித்தவர்கள், 2025-2026 கல்வியாண்டில் பொது பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கு செய்து கொண்ட விண்ணப்ப முடிவுகள் வரும் செப்டம்ர் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியிடப்படவிருக்கிறது.
செப்டம்பர் 5 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்கி, செப்டம்பர் 14 ஆம் தேதி மாலை 5 மணி வரை, தங்களுக்கான முடிவை மனுதாரர்கள் சரிபார்த்துக் கொள்ளலாம் என்று உயர்க்கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








