May 5, 2026
Thisaigal NewsYouTube
ஊழல் விசாரணை: ஐஜேஎம் கார்ப்பரேஷன் தலைவர் கைது
தற்போதைய செய்திகள்

ஊழல் விசாரணை: ஐஜேஎம் கார்ப்பரேஷன் தலைவர் கைது

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.06-

நிறுவன நிர்வாகச் சிக்கல்கள், கொள்முதல் நடைமுறைகள், நிதி பரிவர்த்தனைகள் மற்றும் சுமார் 2.5 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வெளிநாட்டு சொத்துக்களை வைத்திருந்தது தொடர்பான விசாரணையில் IJM Corporation Bhd நிறுவனத்தின் தலைவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

சுமார் 70 வயது மதிக்கத்தக்க அவர், நேற்று வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் புத்ராஜாயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமையகத்தில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, அவரது இல்லத்தில் சோதனைகள் நடத்தப்பட்டன. நிதி மற்றும் முதலீட்டு மேலாண்மை நிறுவனம் ஒன்று, ஒரு முதலீட்டு வங்கி மற்றும் சந்தேக நபரின் இல்லம் என மேலும் மூன்று இடங்களில் ஊழல் தடுப்பு ஆணையம் ஆய்வுகளையும் சோதனைகளையும் நடத்தியது என்பது தெரிய வந்துள்ளது.

கார்ப்பரேட் நிர்வாகம், கொள்முதல் மற்றும் நிதி பரிவர்த்தனைகளில் நடந்த முறைகேடுகள் மற்றும் 2.5 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வெளிநாட்டு சொத்துக்கள் தொடர்பாக கடந்த ஜனவரி ஆம் தேதி முதல் எஸ்பிஆர்எம் விசாரணை நடத்தி வருகிறது.

Related News