Oct 10, 2026
Thisaigal NewsYouTube

நாயை மோட்டார் சைக்கிளில் இழுத்துக் கொண்டுச் சென்ற முதியவர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நாயை மோட்டார் சைக்கிளில் இழுத்துக் கொண்டுச் சென்ற முதியவர் கைது

சுங்கை பட்டாணி, ஜூன்.17-

தனது நாயை மோட்டார் சைக்கிளின் பின்புறம் கட்டி, இழுத்துக் கொண்டுச் சென்ற முதியவரின் மனிதாபிமானமற்றச் செயலுக்கு பலத்த கண்டனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து அந்த முதியவர் கைது செய்யப்பட்டார்.

சுங்கைப்பட்டாணி, பண்டார் புத்ரி ஜெயாவில் நிகழ்ந்ததாக நம்பப்படும் இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து 82 வயதுடைய அந்த முதியவரைப் போலீசார் அடையாளம் கண்டனர்.

எதற்காக மோட்டார் சைக்கிளுடன் நாயைப் பிணைத்து, இழுத்துக் கொண்டு அந்த முதியவர் சென்றார் என்பது குறித்து விளக்கம் அளிக்க அவர் தவறிவிட்டார். அந்த முதியர் கைது செய்யப்பட்டதை கோல மூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஹன்யான் ரம்லான் உறுதிப்படுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →