Jun 29, 2026
Thisaigal NewsYouTube
நாடற்ற குழந்தைகளுக்கும் அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை வழங்கப்படும்- சுகாதார அமைச்சர் தகவல்
தற்போதைய செய்திகள்

நாடற்ற குழந்தைகளுக்கும் அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை வழங்கப்படும்- சுகாதார அமைச்சர் தகவல்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.24-

அவசரநிலைகள் மற்றும் உயிருக்கு ஆபத்தான சந்தர்ப்பங்களில், மலேசியாவில் வாழும் நாடற்ற குழந்தைகளை, அரசாங்கப் பொது மருத்துவமனைகள் ஒருபோதும் கைவிடாது என்று சுகாதார அமைச்சர் ஸுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

மனிதாபிமான அடிப்படையில் நாடற்ற குழந்தைகள் உட்பட அனைவருக்கும் உரிய சிகிச்சைகள் கிடைக்க சுகாதார அமைச்சு விரும்புவதாகவும் நாடாளுமன்றத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கக் கொள்கையைப் பொறுத்த வரையில், உயிர்களைக் காப்பாற்றுவதும், தேவைப்படுவோருக்கு உரிய சிகிச்சை வழங்குவதும் ஆகும் என்றும் ஸுல்கிஃப்லி தெரிவித்துள்ளார்.

இருப்பினும், 2014-ஆம் ஆண்டு மருத்துவக் கட்டண ஆணையின் படி, மலேசியாவில் குடியுரிமை உள்ளவர்களுக்கும், குடியுரிமை இல்லாதவர்களுக்கும் இடையே, கட்டணங்களில் வேறுபாடு இருக்கும் என்பதை ஸுல்கிஃப்லி சுட்டிக் காட்டியுள்ளார்.

நாடற்றவர்களுக்கு, வெளிநாட்டினருக்கான கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் ஸுல்கிஃப்லி தனது எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ளார்.

Related News

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்

பகடிவதை செய்ததாக 6 மாணவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் உடனடி நீக்கம் - மாரா தலைவர் உத்தரவு

பகடிவதை செய்ததாக 6 மாணவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் உடனடி நீக்கம் - மாரா தலைவர் உத்தரவு