பெசுட், அக்டோபர்.25-
சமூக வலைத்தளங்களில் வைரலான கைகலப்பு தொடர்பான காணொளியைத் தொடர்ந்து ஒரு வர்த்தகரான டத்தோ அந்தஸ்தில் உள்ள நபர் உட்பட எட்டு பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
21 க்கும் 41 க்கும் இடைப்பட்ட வயதுயை அந்த எட்டு பேரும் வாக்குமூலம் அளிப்பதற்கு அழைக்கப்பட்டிருந்த போது கைது செய்யப்பட்டனர் என்று பெசுட் மாவட்ட போலீஸ் தலைவர் அஸாமுடின் அஹ்மாட் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக புகார் அளித்த பாதிக்கப்பட்ட நபரான 36 வயது இளைஞரும் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.








