இரண்டு நோயாளிகளையும், ஒரு மருத்துவ உதவியாளரையும் ஏற்றிக்கொண்டு சென்ற அம்புலன்ஸ் வண்டி, குறுக்கே வந்த காருடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவம் இன்று அதிகாலையில் சிரம்பான், மஸ்ஜிட் ஶ்ரீ சென்டாயான் அருகில் நிகழ்ந்தது. 43 வயதுடைய நபர் செலுத்திய மைக்கஸ் ரக அம்புலன்ஸ் வண்டி செபாங், சுங்கை பெலே கிலிருந்து சிரம்பான், துவாங்கு ஜாஃபார் மருத்துவமனையை நோக்கி சென்று கொண்டிருந்த போது இவ்விபத்து நிகழ்ந்ததாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அரிபாய் தாராவே தெரிவித்தார்.
சாலை சந்திப்பில் சிவப்பு நிற சமிக்ஞை விளக்கையும் பொருட்படுத்தாமல் சாலை சந்திப்பை அந்த அம்புலன்ஸ் வண்டி கடக்க முற்பட்ட போது குறுக்கே வந்த வோல்வோ காருடன் மோதி தடம் புரண்டது. இதில் அம்புலன்ஸ் வண்டியில் இருந்தவர்கள் சொற்ப காயங்களுக்கு ஆளாகியதாக அவர் குறிப்பிட்டார்.







