கெடா சுங்கைப்பட்டாணியில் கனத்த மழையினால் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறின. இதில் 20 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டதாக சுங்கைப்பட்டாணி தீயணைப்புப் படையின் தலைவர் இஸ்மாயில் பின் ஹஜி முகமட் ஜைன் தெரிவித்தார்.
நேற்று இரவு 8.00 மணி அளவில் சுங்கைப்பட்டாணி தீயணைப்பு அலுவலகத்திற்கு அவசர அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் ஜாலான் கோலாகெட்டில் சுங்கைப்பட்டாணியிலுள்ள சில இடங்களில் வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பத்தாகவும், அவர்களுக்கு உதவிகள் தேவை என்ற தகவலை பெறப்பட்டதாகவும் இஸ்மாயில் கூறினார் .
தொடர்ந்து , சுங்கைப்பட்டாணி தீயணைப்பு அலுவலத்திலிருந்து 10 தீயணைப்பு வீரர்கள் ஒரு படகு, ஹய்லாக் வாகனத்துடன் சம்பவம் இடத்திற்கு விரைந்தனர். வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் நீரின் மட்டம் 3 அடி வரை உயர்ந்திருந்தது. இதில் ஏறக்குறைய 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 6 ஆண்கள் , 8 பெண்கள் மற்றும் 6 சிறுவர்கள் அடங்குவர் .
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டப்பட்டதாக இஸ்மாயில் தெரிவித்தார்.








