கோலாலம்பூர், ஜனவரி.26-
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு இன்று மாலை வர்த்தக முடிவில் 3 ரிங்கிட் 96 சென்னாக உயர்ந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. 2018-ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு, ரிங்கிட் இந்த வலுவான நிலையை எட்டுவது இதுவே முதல் முறையாகும்.
கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 4 ரிங்கிட்டிற்கும் மேலாக இருந்த ரிங்கிட், இன்று ஒரே நாளில் ஒரு விழுக்காட்டிற்கும் மேலாக உயர்ந்து 3 ரிங்கிட் 96 சென் என்ற அளவில் நிலை பெற்றது.
நாட்டின் நிலையான பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் மலேசிய மத்திய வங்கியான பேங்க் நெகாரா, OPR வட்டி விகிதத்தை 2.75 விழுக்காடாக தக்க வைத்தது முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது.








