Sep 27, 2026
Thisaigal NewsYouTube
எரிபொருள் விலை குறித்த போலிச் செய்தி: 5 பேருக்கு தலா 25,000 ரிங்கிட் அபராதம்
தற்போதைய செய்திகள்

எரிபொருள் விலை குறித்த போலிச் செய்தி: 5 பேருக்கு தலா 25,000 ரிங்கிட் அபராதம்

Share:

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றத்தைப் பயன்படுத்தி, மலேசியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயரப்போவதாகச் சமூக ஊடகங்களில் போலிச் செய்திகளைப் பரப்பிய நபர்கள் குறித்த விசாரணைக் கோப்புகளை சட்டத்துறை அலுவலகம் ஆய்வு செய்துள்ளது.

இதன் அடிப்படையில், ஒரு நபர் மீது சிப்பாங் அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஐந்து பேருக்குத் தலா 25,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், நான்கு பேருக்கு எச்சரிக்கை கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் 1998-ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ளன. இச்சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 5 லட்சம் ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

டிஜிட்டல் தளங்களைப் பொறுப்புடன் பயன்படுத்துமாறும், சமூக நல்லிணக்கத்தையும் பொது அமைதியையும் சீர்குலைக்கும் வகையிலான உள்ளடக்கங்களைப் பகிர வேண்டாம் என்றும் MCMC பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Related News

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்