Oct 16, 2026
Thisaigal NewsYouTube

ஆட்சிக்குழு உறுப்பினர் பகிரங்க மன்னிப்புக்கேட்டுக்கொண்டார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஆட்சிக்குழு உறுப்பினர் பகிரங்க மன்னிப்புக்கேட்டுக்கொண்டார்

ஷா ஆலாம், டிச.9-


சுபாங் ஜெயா மாநகர் மன்ற அமலாக்க அதிகாரிகள், உடம்புப்பிடி நிலையம் ஒன்றில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது, வெறும் துண்டை மட்டுமே அணிந்திருந்த ரேப் பாடகி ஒருவரை வீடியோ படம் எடுக்கப்பட்ட சம்பவம் குறித்து சிலாங்கூர் மாநில ஊராட்சி மற்றும் சுற்றலாத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ எங் சூ லிம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொண்டர்.

உடம்புபிடி நிலையத்தில் சேவையை பெறுவதற்கு ஒரு வாடிக்கையாளராக சென்ற அந்த ரேப் பாடகியை அரை நிர்வாணக் கோலத்தில் வீடியோ படம் எடுக்கப்பட்டதில் சுபாங் ஜெயா மாநகர் மன்ற அமலாக்க அதிகாரிகள் தவறு இழைத்துள்ளதாக எங் சூ லிம் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் தனக்கு ஏற்பட்ட அவமானம் குறித்து, ஷரிப்பா ஸாமரீரா என்ற அந்த ரேப் பாடகி, சுபாங் ஜெயா நகராண்மைக்கழக அதிகாரிகளை சமூக வலைத்தளத்தில் வறுத்து எடுத்து வருவதுடன் போலீசிலும் புகார் செய்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →