Sep 27, 2026
Thisaigal NewsYouTube
கலிமந்தன் ஹெலிகாப்டர் விபத்து: முன்னாள் கேஎல்கே குழுமத்தின் இயக்குநர் பலி
தற்போதைய செய்திகள்

கலிமந்தன் ஹெலிகாப்டர் விபத்து: முன்னாள் கேஎல்கே குழுமத்தின் இயக்குநர் பலி

Share:

இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தன் பகுதியில் கடந்த வியாழக்கிழமை நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மலேசியர், பேட்ரிக் கீ என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர் கோலாலம்பூர் கெப்பாங் குழுமத்தின் முன்னாள் தோட்ட இயக்குநராக பணியாற்றியவர் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த தகவலை தங்கா பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பக்ரி ஜமாலுதீன் தமது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தாம் பேட்ரிக் கீயின் தலைமையின் கீழ் கோலாலம்பூர் கெப்பாங் பெர்ஹாட் நிறுவனத்தில் பணியாற்றியதாக பக்ரி குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், அவர் மிகுந்த மரியாதைக்குரிய தலைவர் என்றும், அவரது அர்ப்பணிப்பு, ஞானம் மற்றும் உறுதிப்பாடு, அவருடன் பணியாற்றிய பலரின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் பக்ரி தமது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.

மேற்கு கலிமந்தன் மாநிலத்தில் நேற்று வியாழக்கிழமை காலை புறப்பட்ட ‘மேத்யூ ஏர் நுசந்தாரா’ என்ற ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானதில் அதில் பயணம் செய்த 8 பேரும் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்